அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் லீக்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் கேஸ் குழாய் உடைந்து கேஸ் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பழைய கட்டிட பகுதி இடிக்கும் பணி நடந்து வருகிறது. பணியின் போது திடீரென கேஸ் குழாய் உடைந்து கேஸ் வெளியேறியது. இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து மருத்துவமனை தொழில்நுட்ப அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனையிட்டு, ஆக்சிஜன் வாயு வெளியேறுவதால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கூறினர். தொடர்ந்து ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும் அறையின் கதவை உடைத்து சிலிண்டரின் கசிவை நிறுத்தினர்.

Night
Day