கல்லூரி மாணவ, மாணவிகள் 15 பேருக்கு எலி காய்ச்சல் உறுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மேலதிடியூரில் உள்ள தனியார் கல்லூரியில் எலி காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கல்லூரி விடுதி சமையலறைக்கு வழங்கப்பட்ட FSSAI உரிமத்தை உடனடியாக ரத்து செய்து உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல்லை திடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இந்த கல்லூரியில், என்ஜினீயரிங் படித்து வரும் உவரியை சேர்ந்த மாணவனுக்கு விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ எனும் எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதன் பேரில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், நம்பியாற்றில் இருந்து கல்லூரிக்கு செல்லும் உபரி நீரை மாணவர்கள் எந்தவித சுத்திகரிப்பு இன்றி குடிப்பதற்கும், விடுதியில் உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் சுகாதாரமின்றி விடுதியில் உணவு சமைத்து வந்தது தெரியவந்தது.  

இதனையடுத்து, கல்லூரியில், காய்ச்சல் முகாம் நடத்தியபோது, 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மறு உத்தரவு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதார அலுவலர் அறிவுறுத்தினார். மேலும், கல்லூரிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ், கல்லூரி விடுதி சமையலறைக்கு வழங்கப்பட்ட FSSAI உரிமத்தை ரத்து செய்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Night
Day