மருத்துவம்
சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர் நினைவாக இலவச மருத்துவ முகாம்...
ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் ராமசாமி உடையாரின் நினைவ?...
ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் ராமசாமி உடையாரின் நினைவாக அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. 25-வது ஆண்டாக ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் தொடங்கிய மருத்துவ முகாமை ராமசந்திரா மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக் கழகத்தின் மருத்துவக் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். மார்பக புற்றுநோய் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, இரத்த அழுத்தம், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவங்களுக்கு இலவச சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் 200 பேருக்கு இலவச கண் கண்ணாடி, காது கேட்கும் கருவிகள் உள்ளிட்டவை மருத்துவ கல்லூரி சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.
ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் ராமசாமி உடையாரின் நினைவ?...
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...