சிறையில் நடைபெற்ற பெண் கைதிகளுக்கான அழகிப் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசில் நாட்டின் சிறைச் சாலையில் பெண் கைதிகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் நடைபெற்ற அழகிப்போட்டியில், கைதிகளின், நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 10 பெண் கைதிகள் கண்கவர் ஆடைகளுடன் மேடையில் வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். உடை அலங்காரம் மற்றும் அணுகுமுறையின் அடிப்படையில் ஜாய் சோரஸ் என்ற பெண் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மகுடம் அணிவித்து நடுவர்கள் கவுரவித்தனர். பிரேசிலில் பெண் கைதிகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், சமூக உணர்வை ஊக்குவிக்கவும், ஆண்டுதோறும் அழகிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Night
Day