'F16, JF17 ரக விமானங்கள் உள்பட பாக். 10 விமானங்கள் அழிக்கப்பட்டன'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபரேசன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி மார்ஷல் அமர் பிரீத் சிங் கூறியுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற 93வது விமானப்படை தின கொண்டாட்டத்தில் பேசிய அவர், கடந்த மே மாதம் நடைபெற்ற ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் ஐந்து F-16 மற்றும் JF-17 ரக போர் விமானங்கள் மற்றும் வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தையும் இந்தியா சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தார். இந்த நீண்ட தூர தாக்குதலுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த அமர் பிரீத் சிங், பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வலுவாக நின்றதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Night
Day