இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

5 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா, சீனா இடையே விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது.

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது. எல்லை பிரச்சனைகள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த சேவை அக்டோபர் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Night
Day