அரபிக்கடலில் உருவாகிறது தீவிர புயல்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுபெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில், வடகிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கம், வடபழனி, மீனம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். 

Night
Day