22 பெண் நக்சலைட்டுகள் உட்பட 103 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கரில் 103 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்துள்ளனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் 22 பெண் நக்சலைட்டுகள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து, போலீசில் சரண் அடைந்துள்ளனர். அவர்களில் 49 பேருக்கு எதிராக மொத்தம் 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், கங்கலூர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் தனியாக நடந்த மோதல் சம்பவம் ஒன்றில் நக்சலைட்டு ஒருவர் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதனால், நடப்பு ஆண்டில் 253 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவரை 410 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.  

Night
Day