அமெரிக்க அரசு முடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செலவினங்கள் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாததால் அமெரிக்கா அரசு நிர்வாகம் முடங்கியது.

அடுத்த நிதியாண்டிற்கான அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் செலவினங்கள் குறித்த மசோதா, செனட் சபையில் ஆண்டுதோறும் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமெரிக்க அரசால் செலவினங்களை தொடர்ந்து செய்ய முடியும் என்ற நிலையில், இந்த ஆண்டிற்கான மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை. செனட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் பதிவாகின. 

குறைந்தபட்சம் 60 வாக்குகள் கிடைத்தால் மட்டுமே மசோதா நிறைவேற்றப்படும் நிலையில், போதிய ஆதரவு கிடைக்காததால் மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. முக்கியமான நிதி மசோதா நிறைவேறாமல் உள்ளதால் அமெரிக்கா அரசு முடங்கியது. 

இதனால் விமானப் போக்குவரத்து, ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கும் சூழல் நிலவுகிறது. மசோதா நிறைவேறும் வரை ராணுவ வீரர்கள், காவல்துறை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் ஊதியம் இன்றி பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயம், இந்த மசோதா நிறைவேறாததால், அத்தியாவசியமற்ற பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் கடுமையாக பாதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை டிரம்ப் அரசு பணிநீக்கம் அல்லது கட்டாய விடுப்பில் அனுப்பும் சூழல் நிலவுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்கா முடங்குவது இதுவே முதல்முறையாகும். 

Night
Day