பிரியாணி கடையில் மின்சாரம் தாக்கி ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னையை அடுத்த பம்மல் அருகே பிரியாணி கடையில் மின்சாரம் தாக்கியதில் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

பம்மல் விசுவாசபுரம் பகுதியில் உள்ள பிரியாணி கடையில் ஊழியர்கள் சிலர் கடையிலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். ஊழியர்கள் தங்கியிருந்த அறையில் மின் பழுது ஏற்பட்டதால் எலக்ட்ரீஷியன் மணிகண்டன் என்பவர் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி துடிதுடித்த போது, அவரை காப்பாற்ற சென்ற பிரியாணி மாஸ்டர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Night
Day