விளையாடி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சைதாப்பேட்டையில் தெருவில் விளையாடிக் கொண்டிந்த சிறுவர்களை தெரு நாய் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அண்மைக் காலமாகவே தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரத்தி கடித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் சைதாப்பேட்டை ரங்கராஜபுரத்தில் ராஜ் என்பவரின் மகன் சாலையில் மற்றொரு சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த தெரு நாய் சிறுவர்களை பயங்கரமாக கடித்து குதறியது. காயமடைந்த சிறுவர்களுக்கு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவர்களை நாய்கள் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day