எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை அருகே இறந்த இளம் பெண்ணின் உடலை வைத்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் பணம் பறித்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலவாசல் பகுதியை சேர்ந்த பாண்டித்துரை என்பவரது மகள் பிரியதர்ஷினி, ராமநாதபுரம் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். அவர் கடந்த 10ம் தேதி ரயிலிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்ததால், சிகிச்சைக்காக மதுரை அனுப்பானடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவி 16 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை 6 லட்சம் ரூபாய் வரை பெற்றோர் செலவு செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாணவியை பார்ப்பதற்கு பெற்றோரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மாணவி இறந்ததை மறைத்து மருத்துவமனை நிர்வாகம் 3 நாட்களாக ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்னர்.