உருவானது சென்யார் புயல்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மலேசியா அருகே மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது.

கடந்த 22ஆம் தேதி மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுவடைந்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், இடம் மாறி புயல் உருவாகியுள்ளது.  ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்த சென்யார் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அந்தமான் கடல் பகுதிகளுக்கும் முன் கூட்டியே மையம் கொண்டிருப்பதால் இந்திய கடலோர பகுதிகளுக்கு பாதிப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day