நகை திருட்டு வழக்குகளில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை அரசே வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

9 வருடங்களாகியும் நகை திருட்டு வழக்கின் நிலை என்னவென்றே தெரியவில்லை என மதுரையை சேர்ந்த சுஜா சங்கரி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தீர்க்கப்படாத திருட்டு வழக்குகளில் திருடு போன நகையின் மொத்த மதிப்பில் 30 சதவீத தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமிழக அரசே புகார்தாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்கென்றே மாவட்டந்தோறும், ஒரு சிறப்பு காவல் பிரிவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

Night
Day