அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார். நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு அநீதி இழைப்பதாக கூறிய பிரதமர் மோடி, எதிர்கால சந்ததியினரைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்றார். கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும்  பிற்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், விவசாயிகள், இளைஞர்கள் என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் வளர்ச்சியின் மையத்தில் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். 2047ம் ஆண்டு நாடு 100வது சுதந்திர நாளைக் கொண்டாடும் போது நமது நாட்டை அவசியம் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்றார். 

Night
Day