சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்தான் பொறுப்பு - தொலைதொடர்பு துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிம்கார்டை பிறர் தவறாகப் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்தான் பொறுப்பு என்று தொலைத் தொடர்புத் துறை எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிம்கார்டு, ஆன்லைன் மோசடி அல்லது இதர சட்டவிரோத காரியங்களுக்கு தவறாக பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டால், அந்த எண்ணுக்குரிய வாடிக்கையாளர்தான் குற்றவாளியாக கருதப்படக்கூடும் என்றும் எனவே  வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டுகளை மற்றவர்களுக்கு அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. செல்போன்களில் உள்ள ஐ.எம்.இ.ஐ.எண்களை சிதைத்தல், திருத்துதல், மாற்றுதல் ஆகியவற்றுக்கு தடை விதிப்பதால் ஐ.எம்.இ.ஐ. எண் சிதைக்கப்பட்ட செல்போன்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Night
Day