சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த வாரங்களில் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது  90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருவதாலும், தக்காளியின் வரத்து குறைவாக காணப்படுவதாலும் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இனிவரும் நாட்களில் மழையின் அளவு மற்றும் விளைச்சலின் அடிப்படையில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

Night
Day