கடல் கொந்தளிப்பால் மாயமான மீனவர் சடலமாக மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடல் கொந்தளிப்பால் மாயமான மீன்வர் சடலமாக மீட்கப்பட்டார். 

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தொண்டி அருகேயுள்ள நம்புதாலை மீனவ கிராமத்தைச் சேர்ந்த  தொண்டீஸ்வரன், பரந்தாமன், ஆகாஷ் ஆகியோர் படகை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு கடலில் நீந்தி வந்தனர். அப்போது கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால் தொண்டீஸ்வரன் என்பவர் கரைக்கு வந்து சேரவில்லை. அவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் சக மீனவர்கள் கடலில் குதித்தும் வலை வீசியும் தேடி வந்தனர். இந்தநிலையில் 20 மணி நேரத்திற்குப் பின் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். 

Night
Day