70 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 5 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பக்தர்கள் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, 70 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் சடலங்களை மீட்டு, படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பேருந்து விபத்து குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Night
Day