நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்-30-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குளிர்காலத் கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் வரும் 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் அணு ஆற்றல் சட்ட மசோதா, உயர் கல்வி ஆணைய மசோதா, அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. எனவே இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தும் பொருட்டு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Night
Day