ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 150க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நடைபெற்றது. அதில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவரை ஆட்சியர் ஒருமையில் பேசி செல்போனை தூக்கி எறிந்ததாகவும், மற்றொரு அலுவலரை உருவ கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திமடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் 150க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆய்வுக் கூட்டத்தின் போது தங்களை ஆட்சியர் அழகு மீனா தகாத வார்த்தைகளால் பேசி மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த செயலுக்கு ஆட்சியர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Night
Day