மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பதிவிட்டதால் சுமார் 11 கோடி ரூபாய்க்கு கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளதாகவும், தங்களது நிறுவனத்தை தொடர்புபடுத்த ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

varient
Night
Day