தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்த மின் உற்பத்தியும் நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுக்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு யூனிட்டுக்கள் தீ விபத்தில் எரிந்து சேதமான நிலையில், 4வது மற்றும் 5வது யூனிட்டுக்களிலும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3வது யூனிட்டில் மட்டுமே 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தநிலையில் இன்று ஏற்பட்ட பழுது காரணமாக மொத்தமாக மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனால் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் குறைவான நுகர்வு தேவையிலும், விளம்பர திமுக ஆட்சியில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது.

Night
Day