ராமேஸ்வரத்தில் கோயிலில் தேங்கிய மழை நீர்-பக்தர்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், ரயில்வே மேம்பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் ராமநாதசாமி கோயில் உள்ளே மழைநீர் புகுந்தது. மேலும், கோயில் நுழைவு வாசல் முன் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால், பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட கோயில்  நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோயிலில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

Night
Day