சென்னை ஜெம் மருத்துவமனையில் கணையப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெருங்குடியில் ஜெம் மருத்துவமனையில் கணையப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புதிய QR ஆதரவு சேவை அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் புற்றுநோயை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர்கள் பங்கற்றனர். மேலும் ஆரம்பகால கண்டறிதலுக்கான அணுகலை எளிதாக்கும் வகையில் ஒரு புதிய QR அடிப்படையிலான நோயாளி ஆதரவு சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் தங்களின் உடல் நலசெயல்பாடுகள் குறித்து பகிரலாம் என கூறப்படுகிறது. மருத்துவமனைக்குச் செல்லத் தயங்கும் அல்லது எந்த மருத்துவரை அணுகுவது என்பது தெரியாத நபர்கள், முன்பதிவு செய்யாமலும், தயக்கமில்லாமலும் நிபுணர்களை எளிதில் அணுகுவதற்கு உதவுவதே இதன் இலக்காகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜெம் மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் பழனிவேலு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Night
Day