'வந்தே மாதரம்' பாடலின் 150ம் ஆண்டு கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை பாடி அனைவரும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

இந்திய சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்து, தேசிய ஒருமைப்பாட்டுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்த இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டுவிழா நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திருச்சி தெற்கு ரயில்வே சார்பில் ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் கோட்ட மேலாளர் பாலக்ராம் நெகி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பங்கேற்று சாதி, மத, இன பாகுபாடு இன்றி வந்தேமாதரம் பாடலைப் பாடி போற்றி வணங்கினர்.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் வந்தே மாதரம் பாடலை ஒருமித்த குரலில் பாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடல் பாடினர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் ஒன்று சேர்ந்து வந்தே மாதரம் பாடலை பாடினர். இதில் ஆசிரியர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Night
Day