அஇஅதிமுக-வில் பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் -கழக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மீண்டும் வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு இருந்தால்தான் பிற கட்சியினர் கழகத்தை நாடி வருவார்கள் என்றும் கழகம் மற்றவர்களை நாடிச் செல்ல தேவையில்லை என்றும் கூறியுள்ள கழக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் இந்த வரலாறு மூலம் சாதனை படைத்தார்கள் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளைத்தில் அஇஅதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்றும் அமைதியாக இருப்பவர்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அஇஅதிமுக-வை ஒருங்கிணைப்பது, புரட்சித்தலைவி அம்மாவின் கனவை தமிழகத்தில் மீண்டும் உருவாக்க ஏதுவாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Night
Day