உடல் எடையை கேட்ட யூடியூபர்... உக்கிரமான நடிகை கவுரி கிஷன்...

எழுத்தின் அளவு: அ+ அ-

அதர்ஸ் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் உடல் எடை குறித்து கேள்வி கேட்ட யூடியூபரை, நடிகை கௌரி கிஷன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் நடிகையாக இருந்தாலும் தனது எதிர்ப்பை உடனடியாக வெளிப்படுத்திய கௌரி கிஷனுக்கு திரையுலகில் ஆதரவு குரல் வலுத்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

அதர்ஸ் படத்தில் தனது கேரக்டரை கேட்காமல், தனது உடல் எடையை அறிந்து கொள்வதுதான் முக்கியமா என செய்தியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கவுரி கிஷனின் காட்சிகள் தான் இவை....

‎அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்ய மாதவன், நடிகை கௌரி கிஷன், அன்ஜூ குரியன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அதர்ஸ். கடந்த வாரம் நடைபெற்ற அதர்ஸ் படத்தின் PRE RELEASE EVENTன் போது, பாடல் காட்சிகளில் கதாநாயகி கெளரி கிஷனைத் தூக்கிச் சுற்றுகிறீர்களே... அவர் ரொம்ப வெயிட்டா இருந்தாரா... அவருடைய உடல் எடை என்ன என்பதை கதாநாயகன் ஆதித்ய மாதவனிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். ரொம்ப வெயிட்டா இல்லை என கதாநாயகன் ஆதித்ய மாதவன் சாதாரணமாக கூறிய நிலையில், ஆனால் இந்த கேள்வி கதாநாயகி கவுரி கிஷனை மனதளவில் புன்படுத்திவிட்டது என்றே கூறலாம்... 

இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த கவுரி கிஷன், அந்த செய்தியாளர் கேட்டது STUPID question என்றும், அவர் மூளை இல்லாதவர் மாதிரி பேசியிருந்தார் என்றும் டென்ஷனாக கூறியிருக்கிறார். அவரிடம் பேசினாலும் வாதமாக மாறுமே தவிர, அந்த செய்தியாளர் மாற போவது இல்லை என்று பேசியுள்ள கிஷன், நடிகைகளின் திறமையைவிட்டுவிட்டு உடல் எடை, அழகு குறித்தெல்லாம் பேசுறது சரியில்லை என ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார். 

இந்த நிலையில் தான் அதர்ஸ் படத்தின் படத்திற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட நடிகை கவுரி கிஷனை டார்க்கெட் செய்யும் விதமாக இரண்டு யூடியூபர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பினர். அப்போது, Stupid question என நீங்கள் எப்படி சொல்வீர்கள், உடல் எடை குறித்து கேட்டது ஒன்றும் தவறில்லையே என செய்தியாளர் கூறினார். 


அதற்கு பதிலளித்த கிஷன், ஓ தனது எடையை கேட்டது நீங்கள்தானா, தன் எடையை ஏன் கேட்டீர்கள், நான் அந்த படத்தில் நடித்த கேரக்டர் குறித்து எதையும் கேட்காமல் எடை குறித்து ஏன் கேட்டீர்கள் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இது தன்னை பாடி ஷேமிங் செய்வது போல் இருந்ததாகவும், தனது உடல் எடையை நடிகரிடம் கேட்பதா எனவும் கரராக பேசிய கவுரி கிஷன், தன் எடையை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என செய்தியாளரிடம் கோபமாக கேள்வி எழுப்பினார்.

அப்போது அந்த செய்தியாளர், இதில் என்ன தவறு இருக்கு என பதிலளிக்க இருவருக்கும் இடையே வார்த்தை போர் முற்றியது. மரியாதையாக பேசுங்கள் என செய்தியாளர் அறிவுரை வழங்க, தான் மிகவும் பொறுமையாக பேசுவதாகவும், நீங்கள் தான் கத்துகிறீர்கள் என கிஷன் பதிலளிக்க செய்தியாளர் சந்திப்பு களேபரமாக மாறியது. 

இங்கு இருக்கும் ஒரே பெண்ணான தன்னிடம் இப்படி கத்தி பேசுவது சரியா எனவும், 80 கிலோ இருப்பேன், 60 கிலோ இருப்பேன், அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை என கவுரி கிஷன் கேட்கவே, அங்கிருந்த மற்றறொரு செய்தியாளரும் வாக்குவாதம் செய்யாததால் கண்கலங்கி சிறிது நேரம் அமைதியாகிவிட்டார் கவுரி கிஷன்.... 

இந்த களேபரத்துடன் கண்கலங்கியவாறு நடிகை கவுரி கிஷன் புறப்பட்டு சென்ற நிலையில், அங்கு நடந்த சம்பவத்தை கண்டித்துள்ள பாடகி சின்மயி, நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். எந்தவொரு ஆண் நடிகரிடமும் எடை குறித்து கேட்பதில்லை எனவும், நடிகைகளை குறிவைத்து மட்டும் இதுபோன்ற கேள்விகளை ஏன் கேட்கிறார்கள் என சின்மயி ஆதங்கத்தை கொட்டி உள்ளார். 

இதேபோன்று நடிகை கௌரி கிஷன் மீது Body Shaming செய்யப்பட்டதாகவும், அவர் தனது கருத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் நடிகை ரோகினி குற்றஞ்சாட்டி உள்ளார். 

நடிகை கௌரி கிஷனுக்கு நடிகை ரோகினி நடிகை மஞ்சிமா மோகன் தொடர்ந்து நடிகை குஷ்பூ ஆதரவு தெரிவித்துள்ளார். தன்னம்பிக்கையுடன் தனது நிலைப்பாட்டில் உறுதியாய் நின்று, அதற்கு உரிய பதிலைத் தந்த கௌரி கிஷனை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பேசுபொருளாக மாறி உள்ள நிலையில், படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காகவே இதுபோன்ற சர்ச்சைக்குறிய வகையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். 

Night
Day