9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, துாத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, நவம்பர் வரும் 15ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Night
Day