பீகார் துணை முதலமைச்சரின் வாகனம் மீது தாக்குதல்...

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க சென்ற துணை முதலமைச்சரும், லக்கிசராய் தொகுதி வேட்பாளருமான விஜய்குமார் சின்ஹாவின் வாகன பேரணி மீது காலணி மற்றும் கற்களை வீசி ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவையொட்டி துணை முதலமைச்சர் விஜய்குமார் சின்ஹா, அவர் போட்டியிடும் லக்கிசராய் தொகுதியில் வாகன பேரணியில் ஈடுபட்டிருந்தார். கோரியாரி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த விஜய்குமார் சின்ஹாவின் வாகன பேரணி மீது கற்கள், காலணி, மாட்டு சாணியை வீசி ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

மேலும், விஜய்குமார் சின்ஹாவை கிராமத்திற்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்திய ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியினர், ஒழிக, ஒழிக என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை துணை ராணுவப்படையினரும், போலீசாரும் இணைந்து தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Night
Day