ஜனகராஜகுப்பம் கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கழக நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஜனகராஜ குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க, முன்னாள் அரசு தலைமை கொறடா பி.எம். நரசிம்மன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருத்தணி அருகே உள்ள ஜனகராஜ குப்பம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும் இயேசு ரட்சிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க, முன்னாள் அரசு தலைமை கொறடாவும், முன்னாள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான பி.எம். நரசிம்மன் கலந்து கலந்துகொண்டு, ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஆனந்தன், சேகர், எம்.எம்.கந்தசாமி, மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

varient
Night
Day