கிறிஸ்துமஸ் பண்டிகை - பாம்புகோவில் ஆட்டுச் சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை அமோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிறிஸ்துமஸ் பண்டிகை பெருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல பாம்புகோவில் ஆட்டுச் சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் சந்தையில் குவிந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதேபோன்று நாட்டுக் கோழிகளின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. சந்தையில் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Night
Day