ரூ.70 லட்சத்திற்கு காளைகள், பசுக்கள் விற்பனை அமோகம் - வியாபாரிகள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி பகுதியில் உள்ள வார சந்தையில் வழக்கமான நாட்களைவிட அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு வருகை தந்ததால், சந்தை முழுவதும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. விவசாய பணிகள் மற்றும் குடும்ப தேவைகளுக்காக காளைகள், பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். கன்று குட்டி சுமார் 8 ஆயிரம் ரூபாய் வரையும், பசுக்கள் 20 ஆயிரம் ரூபாய் வரையும், காளைகள் சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையாகின. சந்தையில் 70 லட்சம் ரூபாய்க்கு காளைகள் மற்றும் பசுக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

varient
Night
Day