22 நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரிடம் சரண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசா மாநிலத்தில் 22 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர். மல்கன்கரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்து செயல்பட்டு வந்த 22 நக்சலைட்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடி பொருட்கள் மற்றும் 13 நவீன வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்  சரணடைந்து உள்ளனர். இதில் சிலர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நக்சலைட்டுகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு மறுவாழ்விற்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

varient
Night
Day