இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஜம்முவில் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. வங்கசேதத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்தான் ஹாடி மறைவை தொடர்ந்து அங்கு வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன. வன்முறையின் போது இந்து இளைஞரை கொலை செய்து நடுரோட்டில் வைத்து தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே வங்கதேசத்தில் தொடர்ச்சியாக சிறுபான்மையினர் மற்றும் இந்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் டோக்ரோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் உருவப்படத்திற்கு காலணிகளால் மாலை அணிவித்த போராட்டக்காரர்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Night
Day