கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை பலவீனப்படுத்துவது ஒரு கூட்டு தார்மீக தோல்விக்கு சமம் - சோனியா காந்தி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் மற்றும் பிற முக்கிய சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் மூலம், உரிமைகள் சார்ந்த சட்டமன்ற கட்டமைப்பை மத்திய அரசு தகர்த்துவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக முன்னணி ஆங்கில நாளேடு ஒன்றில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை பலவீனப்படுத்துவது ஒரு கூட்டு தார்மீக தோல்விக்கு சமம் என்று குற்றம் சாட்டியுள்ளார். 100 நாள் வேலை திட்டம் என்பது வெறும் ஒரு நலத்திட்ட முயற்சி மட்டுமல்ல, கிராமப்புற குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்யும் உரிமைகள் சார்ந்த திட்டம் என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது பனிப்பாறையின் முனை மட்டுமே என்று குறிப்பிட்ட அவர்,  இது உலகின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஆழமான கட்டமைப்பு அழிவின் அடையாளம் என்றும் அவர் விமர்சித்தார்.

கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, தேசிய கல்விக் கொள்கையால். கல்வி உரிமை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் தொடக்கப் பள்ளிகள் மூடப்படுவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

Night
Day