அசாம் கவுகாத்தியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவட்டங்களாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவை தொடர்ந்து அசாம் மாநிலம் கவுஹாத்தி சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த முனையம் 4 ஆயிரம்  கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது, மேலும் இது நாட்டின் முதல் இயற்கை கருப்பொருள் விமான நிலைய முனையமாகும். திறப்பு விழாவிற்குப் பிறகு பிரதமர் மோடி முனையத்தை  பார்வையிட்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய சூழலில் இந்தியா குறித்த உலகின் பார்வை மாறிவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.  இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறி வருவதாகவும், இதில் நவீன உள்கட்டமைப்பின் வளர்ச்சி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  வளர்ந்த இந்தியாவின் உறுதியை நிறைவேற்ற, 2047ம் ஆண்டிற்கு இந்தியா தயாராகி வருகிறது என்றும் நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் இந்த மாபெரும் வளர்ச்சி பிரச்சாரத்தில் பங்கேற்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். 


Night
Day