"20 ஆண்டுகால வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒரே இரவில் தகர்க்கப்பட்டது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரே இரவில் மோடி அரசு தகர்த்துவிட்டது என்று எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், விபி - ஜி ராம் ஜி என்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மறுசீரமைப்பு அல்ல என்று குற்றம்சாட்டியுள்ளார். விபி - ஜி ராம் ஜி என்பது அடிப்படையிலேயே மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிரானது என்றும், இந்த மசோதா எவ்வித ஆய்வுமின்றி நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதாகவும், மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற  எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டம், ஆய்வு செய்யப்படாமல், நிபுணர் ஆலோசனையை பெறாமல், பொது மக்களின் கருத்துக்களை கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Night
Day