நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மசோதாக்கள் நிறைவேற்றம் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

குளிர் கால கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டத் தொடர் குறித்து பேட்டியளித்த அவர், வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதம் மூலம் தேசபக்தி விழிப்புணர்வு தூண்டி விடப்பட்டதாக கூறினார். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்களுக்கு மிகத்தெளிவாக பதிலளிக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் முறைக்கு எதிராக குற்றம் சாட்டியவர்கள் அம்பலப்படுத்தப்பட்டனர் என்றும் அவர் கூறினார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் உறுதி அளிக்க கொண்டுவரப்பட்ட "ஜி ராம் ஜி" மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.  

varient
Night
Day