டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான அணிக்கு அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி அணியில் இடம் பெற்றுள்ளனர்.

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. 

இந்த தொடருக்கான அணிகளை ஒரு மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும், சமர்பிக்க வேண்டும். அதன்படி தேர்வுக் குழு தலைவர் அகர்கர் தலைமையில் மும்பையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கொண்டார். கூட்டத்தை தொடர்ந்து டி20 உலகக் கோப் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அண்மை காலமாக ரன் குவிக்க திணறி வரும் சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

Night
Day