பிரபல ஜவுளி அங்காடி சார்பில் பேஷன் ஷோ நிகழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் பிரபல ஜவுளி அங்காடி சார்பில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கண்கவர் ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்து அசத்தினர். 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பிரபல ஜவுளி அங்காடியில் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆரோவில் மற்றும் உள்ளூரில் புதிதாக தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள், ரசாயனம் இல்லாத உடைகள் உள்ளிட்ட பல்வேறு பிராண்ட் உடைகளை அணிந்து இளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒய்யாரமாக நடந்தனர். நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Night
Day