சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்குவது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்குவது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் மெரினா கடற்கரை பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்குவது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடற்கரை பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலில் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும் வரைபடம், ப்ளூ பிளாக் பீச் பணிகள், நீச்சல் குளம் கழிப்பறைகள் என அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் கடைகள் இவ்வாறு நெருக்கமாக இருந்தால் எப்படி மக்கள் பயன்படுத்த முடியும் என்றும் நெருக்கமாக இருந்தால் சுவாச பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், ப்ளூ பிளாக் பணியினை ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள் ப்ளூ பிளாக் இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் நீலக்கொடி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஆய்வை செய்து, அவர்கள் தரப்பில் எந்த பிரச்னையும் இல்லை என சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும். ஆய்வின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால் மாநில அரசு “நீலக்கொடி” என்ற பெயரை பயன்படுத்த முடியாது என உத்தரவிட்டனர்.

Night
Day