பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 செலுத்தும் திட்டம் - துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் பெண்களின் வங்கிக் கணக்குகளில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். 

பீகார் முதலமைச்சரின் மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு, முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாய் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பவுள்ளது. இதற்காக 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திட்டத்தை இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி, மகளிரின் சுயமரியாதை மற்றும் வளர்ச்சிக்காக, அவர்களுடைய சகோதரர்களாக தாமும், நிதிஷ் குமாரும் ஓய்வின்றி உழைத்து வருவதாக கூறினார். இன்று துவங்கப்பட்ட திட்டமும் இதற்கு எடுத்துக்காட்டு என்று கூறிய அவர், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் நிச்சயமாக இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Night
Day