ஜவுளிக் கடையில் திருடிய புகாரில் பெண்ணுக்கு சரமாரி அடி, உதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜவுளிக் கடையில் திருடிய புகாரில் பெண்ணை கொடூரமாகத் தாக்கிய கடை உரிமையாளர் மற்றும் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர். சிக்பேட்டையில் உமேத் ராம் என்பவருடைய கடையில் இருந்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 61 புடவைகள் கொண்ட ஒரு மூட்டையை ஒரு பெண் திருடியதாகக் கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம் சிசிடிவியில் பதிவான நிலையில், மறுநாள் அந்தப் பெண் மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது ​​கடையின் உரிமையாளரும், ஊழியரும் அந்த பெண்ணை பிடித்து தரதரவென இழுத்து அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து வந்த போலீசார் கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்தனர். அதேசமயம், அந்த பெண் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, கடை உரிமையாளர் மற்றும் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.

Night
Day