ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலி - மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாததால் உடல் நலம் சரியில்லாத தந்தையை மகன் இழுத்து சென்ற நெஞ்சை உலுக்கும் காட்சி வெளியாகியுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து வெளியே செல்ல நோயாளி ஒருவர் வீல் சேர், ஸ்ரெச்சருக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக  காத்திருந்ததாக கூறப்படுகிறது. பொறுமை இழந்த இளைஞர், தனது தந்தையை இழுத்துச் சென்றுள்ளார். மேலும் இதுதொடர்பாக புகார் அளிக்கவோ உதவி கோரவோ வரவேற்பு பகுதியில் ஊழியர்களே இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பொது மக்களின் நலனில் சுகாதாரத்துறை அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து மேற்பார்வையாளர்கள் எஸ்தர் ராணி, மணிவாசகம் ஆகிய இருவரையும் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

Night
Day