பெரம்பலூரில் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூரில் நான்கு ரோடு அருகே அரியலூர்  தேசிய நெடுஞ்சாலையில் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அறுமடல் பிரிவு பாதை பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் மது அருந்தும் கூடத்துடன் கூடிய டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதியில் தினந்தோறும் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்  மதுபான கடைக்கு மிக அருகில்  தனியார் சார்பில் 12 மணி நேரமும் இயங்கும் வகையிலான மன மகிழ் மன்றம் துவங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு அப்பகுதி மக்கள்  மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்திருந்தும் மனமகிழ் மன்றம் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டித்து  அப்பகுதி மக்கள்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Night
Day