அரசு மருத்துவமனையில் மருந்துகள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் - மருந்தாளுநர்கள் பற்றாக்குறையே காரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை அரசு மருத்துவமனையில் போதிய மருந்தாளுநர்கள் இல்லாததால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் 8 முதல் 10க்கும் மேற்பட்ட மருந்து வழங்கும் இடங்கள் இருக்கும் சூழலில்  சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள், மருந்து மாத்திரைகள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மருந்தாளுநர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணமாக கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Night
Day