மயிலாடுதுறையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், எஸ்.கே.எல். நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் 5 நாட்களாக மக்கள் தவித்து வருகின்றனர். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு தண்ணீரைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், இந்த பகுதியில் வடிகால் வசதி இல்லாததே மழைநீர் தேங்க காரணம் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி கொள்ளிடம் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day