ஜி.என்.டி.சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர்.
 
அதிகாலை முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்கள் வெள்ளைக்காடாய் காட்சியளிக்கிறது. தாமரை ஏரியில் தேங்கிக் கிடக்கும் கழிவு நீர், சிப்காட் ரசாயன கழிவுகளுடன் கலந்து வெளியேற வழி இல்லாமல் கும்மிடிப்பூண்டியின் பிரதான சாலையான ஜி.என்.டி சாலையில் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், துர்நாற்றமும் வீசுகிறது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீரை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day