எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு பெண் குழந்தையை கிணற்றில் தள்ளி விட்டு தாயும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
கங்கைகொண்டான் பருத்தி பகுதியை சேர்ந்த முத்தையா - முத்துலட்சுமி தம்பதியருக்கு இரண்டு மகள் உள்ளனர். இந்நிலையில், முத்தையா அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த முத்துலட்சுமி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். இதனைதொடர்ந்து முத்தையா, மாமியாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு வந்துள்ளார்களா என கேட்டுள்ளார். அப்போது இங்கு யாரும் வரவில்லை என தெரிவித்ததை அடுத்து முத்தையா தேடிய போது கங்கைகொண்டான் பகுதியில் உள்ள கிணற்றுக்கு அருகே முத்துலட்சுமியின் செருப்பு கிடந்துள்ளது. பின்னர் முத்தையா கொடுத்த தகவலில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுகுள் தேடிப் பார்த்த போது முத்துலட்சுமி மற்றும் அவரது இரண்டு மகள் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.